article

மனிதக் கண்களுக்கு புலப்படாத, நுண்ணோக்கிகளைக் கொண்டு மட்டுமே காண வல்ல உயிரினங்களை நுண்ணுயிர்கள் (Microorganisms) என்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். நுண்ணுயிர்கள் பற்றி ஆராயும் அறிவியல் துறை நுண்ணுயிரியல் ஆகும்.

நுண்ணுயிர்களின் அளவு


நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒருத் திசுள் மட்டுமே கொண்டவை. எனினும், பலத் திசுள் உயிரினங்கள் சிலவும் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் ப்ரோடிஸ்டுகள் போன்ற ஒருத் திசுள் உயிரினங்களும் உண்டு.

நுண்ணுயிர்களின் வாழிடம்


கடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீர் ஊற்றுகள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத் தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.

நுண்ணுயிர்களின் பயன்பாடுகள்


வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. மனிதர்கள், விலங்குகள், தவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு.

நுண்ணுயிரியல்

Microorganisme | Mikroorganismus | Mikroorganisme | Mikroorganismus | Microorganism | Mikroorganismo | Microorganismo | Mikrobio | Mikrobi | Microorganisme | Microorganismo | מיקרואורגניזם | Mikroorganizmi | Mikroorganisme | 微生物 | 미생물 | Mikroorganisms | Едноклеточен организам | Micro-organisme | Mikroorganisme | Mikroorganisme | Mikroorganizm | Micróbio | Microorganism | Микроорганизмы | Unicellular organism | Mikroorganizem | Mikroorganism | จุลินทรีย์ | Mikroorganizma | یک خلوی جاندار | Vi sinh vật | 微生物

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "நுண்ணுயிர்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld