article

Zhakaram.png மட்டுமே உள்ளது என்று கருதப்படுகிறது.]]

தமிழ் (Tamil) திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது பேசப்பட்டு வரும் சிலவேயான செம்மொழிகளில் ஒன்றாகும். எழுத்தளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதால் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திச்சூடி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.


வரலாறு


மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கோண்டது, தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. *. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்


தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

தமிழ் பேசப்படும் இடங்கள்


தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தொன்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

அத்துடன், இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் குறிப்பாக, பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில், இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (ஹார்ட் அவர்களின் அறிக்கையை இங்கே காண்க). இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது. (குடியரசுத் தலைவரின் பேச்சையும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம் தொடர்பான பிபிசி செய்தியையும் இங்கே காண்க.)

பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். *

வட்டார மொழி வழக்குகள்

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.

The Ethnologue lists twenty-two current dialects of Tamil, including Adi Dravida, Aiyar, Aiyangar, Arava, Burgandi, Kasuva, Kongar, Korava, Korchi, Madrasi, Parikala, Pattapu Bhasha, Sri Lanka Tamil, Malaya Tamil, Burma Tamil, South Africa Tamil, Tigalu, Harijan, Sanketi, Hebbar, Tirunelveli and Madurai. Other known dialects are Kongu and Kumari.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.

எழுத்து முறை


தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்து பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.

எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1975-ல் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

ஒலிகள்


தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.

உயிர் எழுத்துக்கள்

உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள்(நெடில்) என்வும் வழங்கப்படும்.

குறிலெழுத்துகள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

மெய் எழுத்துக்கள்

மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்க்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

  • வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
  • இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்

சிறப்பு எழுத்து

The special character 'ஃ' (pronounced 'akh') is called āytham in the Tolkāppiyam (see Tolkāppiyam 1:1:2). The āytham is rarely used by itself: it normally serves a purely grammatical function as an independent vowel form, the equivalent of the overdot diacritic of plain consonants. The rules of pronunciation given in the Tolkāppiyam suggest that the āytham could have glottalised the sounds it was combined with. Although the character was common in classical Tamil, it fell out of use in the early modern period and is now very rare in written Tamil. It is occasionally used with a 'p' (as ) to represent the phoneme *.

The āytham is also called ahenam (literally, 'the "ah" sound'). Its resemblance to the three dots that were found on shields in mediaeval times, and the similarity of the name āytham to the word āyutham meaning 'weapon' or 'tool' has resulted in it often being called āyutha ezhuthu (literally, 'the war-weapon letter').

ஒலிப்பியல்

Unlike most other Indian languages, Tamil does not have aspirated consonants. The Tamil script also does not distinguish between voiced and unvoiced sounds, although both are present in the spoken language. Voiced and unvoiced sounds are not quite allophones, however. Tamil speakers are aware of the difference, and the Tolkāppiyam cites detailed rules as to when a letter is to be pronounced with voice and when it is to be pronounced unvoiced. The letter 't', for example, was to be pronounced voiced if it was at the beginning of a word, doubled or followed by another hard consonant, and unvoiced otherwise.

With the exception of one rule - the pronunciation of the letter c at the beginning of a word - these rules are largely followed even today in pronuncing centamil. The position is, however, much more complex in relation to spoken koduntamil. The pronunciation of southern dialects and the dialects of Sri Lanka continues to reflect these rules to a large extent, though not completely. In northern dialects, however, sound shifts have changed many words so substantially that these rules no longer describe how words are pronounced. In addition many, but not all, Sanskrit loan words are pronounced in Tamil as they were in Sanskrit, even if this means that consonants which should be unvoiced according to the Tolkāppiyam are voiced.

Phonologists are divided in their opinion over why written Tamil did not distinguish between voiced and unvoiced characters. One point of view is that Tamil never had conjunct consonants or voiced stops - voice was rather the result of elision or sandhi. Consequently unlike Indo-European languages and other Dravidian languages, Tamil did not need separate characters for voiced consonants. A slightly different theory holds that voiced consonants were at one stage allophones of unvoiced consonants, and the lack of distinction between the two in the modern script merely reflects that.

குறுக்கம்

குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.

  1. குற்றியலுகரம் - உயிர்
  2. குற்றியலிகரம் - உயிர்
  3. ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong}
  4. ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர்
  5. ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்து (ஆய்தம்)
  6. மகரக் குறுக்கம் - மெய் ம்

இலக்கணம்


தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சொல் வளம்


பார்க்கவும்: விக்சனரியில் உள்ள Category:Tamil language மற்றும் Category:Tamil derivations

Modern Tamil vocabulary still retains most of the words from classical Tamil. Due to this and because of the emphasis on learning classical works like Tirukkural, classical Tamil is comprehensible in various degrees to most native speakers of today. However, a number of Sanskrit loan words have been adapted and used commonly in modern Tamil. But, unlike some other Dravidian languages, these words are restricted mainly to spiritual terminology and abstract nouns. Besides Sanskrit, there are a few loan words from Persian and Arabic implying trade ties in ancient times. Since around the 20th century, English words have also begun to be used freely in colloquial Tamil. Some modern technical terminology is borrowed from English, though attempts are being made to have a pure Tamil technical terminology. Many individuals, and some institutions like the Government of Sri Lanka and Tamil Virtual University have generated technical dictionaries for Tamil.

There are also many instances of Tamil loan words in other languages. Popular examples are cheroot (churuttu meaning "rolled up"), mango and catamaran (from kattu maram meaning "bundled logs"). For more such words, see here.

குறிப்புகள்


தற்காலக் குறிப்புகள்

  • Kāṅkēyar (1840). Uriccol nikaṇṭurai. Putuvai, Kuver̲an̲mā Accukkūṭam.
  • Mahadevan, Iravatham (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press. ISBN 0674012275.
  • Natarajan, T. (1977), The language of Sangam literature and Tolkāppiyam. Madurai, Madurai Publishing House.
  • Pope, GU (1862). First catechism of Tamil grammar: Ilakkaṇa vin̲aviṭai - mutar̲puttakam. Madras, Public Instruction Press.
  • Pope, GU (1868). A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language. (3rd ed.). Madras, Higginbotham & Co.
  • Rajam, VS (1992). A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia, The American Philosophical Society. ISBN 087169199X.
  • Schiffman, Harold F. (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil". Language in Society 27, 359–385.
  • Schiffman, Harold F. (1999). A Reference Grammar of Spoken Tamil. Cambridge, Cambridge University Press. ISBN 0521640741.
  • Asher, Ron and E. Annamalai (2002) Colloquial Tamil: The Complete Course for Beginners Routledge. ISBN: 0415187885

பழங்காலக் குறிப்புகள்

  • Pavaṇanti Muṉivar, Naṉṉūl Mūlamum Viruttiyuraiyum, (A. Tāmōtaraṉ; ed., 1999), International Institute of Tamil Studies, Chennai.
  • Pavaṇanti, Naṉṉūl mūlamum Kūḻaṅkaittampirāṉ uraiyum (A. Tāmōtaraṉ ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.
  • Taṇṭiyāciriyar, Taṇṭiyāciriyar iyaṟṟiya taṇṭiyalaṅkāram: Cuppiramaṇiya Tēcikar uraiyuṭaṉ. (Ku. Mutturācaṉ ed., 1994). Tarmapuri, Vacanta Celvi Patippakam.
  • Tolkāppiyar, Tolkāppiyam Iḷampūraṇar uraiyuṭaṉ (1967 reprint). Ceṉṉai, TTSS.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புகள்


பொது

தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள். இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ள கட்டுரைகள் | திராவிட மொழிகள் | ஆசிய மொழிகள் | மொழிகள் | தமிழ்

Тамилски език | Tamileg | Tàmil | Tamileg | Tamil | Tamilische Sprache | Tamil language | Tamila lingvo | Idioma tamil | زبان تامیل | Tamili | Tamoul | तमिळ भाषा | Tamil nyelv | Bahasa Tamil | Lingua tamil | タミル語 | Basa Tamil | ტამილური ენა | ತಮಿಳು | 타밀어 | Tamilų kalba | Bahasa Tamil | Tamil | Tamil | Tamilsk språk | Język tamilski | Língua tâmil | Тамильский язык | तमिळ्‌ | Tamilski jezik | Tamil language | Gjuha Tamil | Tamil | ภาษาทมิฬ | 泰米尔语

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "தமிழ்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld