சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப்ஸ் என்பவர் சிட்னி நகரத்தை ஸ்தாபித்தார்.
Sydney_opera_house_and_skyline.jpg நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் டவுன் ஹால் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய மியூசியம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.
ஓபரா ஹவுஸ் அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம்.
நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
Sydney | سيدني | Sydney | Сидни | Sydney | Sydney | Sydney | Sydney | Sydney | Sydney | Sidnejo | Sydney | سیدنی | Sydney | Sydney | Sidney, Australia | 시드니 | सिडनी | Sydney | Sydney | Sydney | סידני | Sydney | Sydney | Sidnėjus | Sydney | Sydney | シドニー | Sydney | Sydney | سىدنېي | Sydney | Sydney | Sydney | Сидней | Sydney | Sydney | Sydney | Sydney | Sydney | Сиднеј | Sydney | Sydney | Sydney | ซิดนีย์ | Sydney | Sidney | Сідней | 悉尼 | 悉尼