article

இலத்திரனை (எலெக்ட்ரான்) ஒளி மூலமாகக் கொண்டு செயற்படும், நுண்நோக்கி இலத்திரன் நுண்நோக்கி எனப்படுகின்றது. இது நுண்ணிய பொருட்களை அதிக பிரிதிறன் வலுவுடன் (resolving power) பெரிதாக்கிக் காட்டவல்லது. இது 500,000 மடங்கு அளவுக்குப் பெரிதாக்கும் திறன் கொண்டது.

வரலாறு


ஏர்ணஸ்ட் ருஸ்கா (Ernst Ruska) என்னும் ஜெர்மானிய இயற்பியலாளர் முதன்முதலாக இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். இலத்திரன் அலை இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக, அதை ஒளியைக் கையாள்வதுபோலக் கையாள முடியும் என அவர் நம்பினார். காந்தப்புலத்தைப் பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்திச் செயற்படவைக்க முடியும் என அறிந்திருந்த ஏர்ணஸ்ட், ஒளியைக் கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்வதுபோல், காந்தப் புலத்தைப் பயன்படுத்தி இலத்திரன் அலைகளைக் குவிக்க முடியும் என உணர்ந்தார். அலை நீளம் குறையும் போது, பெருப்பிக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால், குறைந்த அலை நீளம் கொண்ட இலத்திரன் அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதாரண ஒளியியல் நுண்நோக்கிகளைவிட அதிக உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என அவருக்குப் புலப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் மக்ஸ் நொல் என்னும் இன்னொரு இயற்பியலாளருடன் சேர்ந்து திருத்தமற்ற இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். நடைமுறைத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இது இல்லாதிருந்தாலும், இதன்மூலம் 400 மடங்கு உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. இக்கண்டுபிடிப்புக்காக ருஸ்காவுக்கு 1986 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதலாவது நடைமுறையில் பயன்படுத்தப்படக்கூடிய இலத்திரன் நுண்நோக்கி எலி பிராங்க்ளின் பர்ட்டன் (Eli Franklin Burton) மற்றும் அவரது மாணவர்களான சிசில் ஹால் (Cecil Hall), ஜேம்ஸ் ஹில்லியர் (James Hillier), அல்பர்ட் பிறிபஸ் (Albert Prebus) என்பவர்களால் கனடாவிலுள்ள ரொராண்டோ பல்கலைக் கழகத்தில் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

நவீன இலத்திரன் நுண்நோக்கிகள் 20 இலட்சம் மடங்குவரை கூட உருப்பெருக்கும் திறன் கொண்டவையாக இருப்பினும், அவை இன்னும் ருஸ்காவின் மாதிரியின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் இலத்திரன் நுண்நோக்கிகள் முக்கியமான நவீன சோதனைச் சாலைகளில் எல்லாம் இடம் பிடித்துள்ளன. இந் நுண்நோக்கிகள், நுண்ணுயிர்கள், திசுள்கள் (கலம்)போன்ற உயிரியற் பொருட்களை ஆராயவும், உலோகவியல், படிகக் கட்டமைப்புக்கள் போன்றவற்றில் ஆய்வு செய்யவும் பெரிதும் பயன்படுகின்றன.

வகைகள்


இலத்திரன் கற்றை நுண்நோக்கிகள்

செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி
(Transmission Electron Microscope)

செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கிகளில், எதிர்மின்வாய்களில் இருந்து கதிர்வீசப்படும் உயர் மின்னழுத்த இலத்திரன் கற்றைகள் காந்தவில்லைகளினால் முறைப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.

துருவுமுறை இலத்திரன் நுண்நோக்கி
(Scanning Electron Microscope)

கற்றைகளாகச் செலுத்தப்படும் இலத்திரன்களை (முதல்நிலை இலத்திரன்கள்) உணர்தலை அடிப்படையாகக் கொண்ட செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கிகளைப் போலன்றி, துருவுமுறை இலத்திரன் நுண்நோக்கிகள், செலுத்தப்படும் இலத்திரன் கற்றைகளினால் அருட்டப்பட்டு, மேற்பரப்புகள் வெளியேற்றும் இலத்திரன்களை (துணைநிலை இலத்திரன்கள்) உணர்வதன்மூலம் அவற்றின் உருப்பெருக்கப்பட்ட படிமங்களை உருவாக்குகின்றன.

துருவல் செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி
(Scanning Transmission Electron Microscope)

தெறிப்புமுறை இலத்திரன் நுண்நோக்கி
(Reflection Electron Microscope)

இவற்றையும் பார்க்கவும்


வெளியிணைப்புகள்


நுண்நோக்கியியல் | நுண்நோக்கிகள்

Elektronový mikroskop | Elektronenmikroskop | Electron microscope | Microscopio electrónico | Microscope électronique | Elektronski mikroskop | Mikroskop elektron | Elektronenmicroscopie | 電子顕微鏡 | Elektronmikroskop | Mikroskop elektronowy | Microscópio eletrônico | Electron microscope | Elektronimikroskooppi | 電子顯微鏡

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "இலத்திரன் நுண்நோக்கி".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld