article

கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20 000 மக்களால் இம் மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாண்டிலும் (Greenland) 40 000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.

இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் ஒரு மூத்த குடிமக்களின் மொழி. 1894 இல் தான் எழுத்துருவம் கொண்ட மொழி. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி. இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம் மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள எடுக்கும் அக்கறை உச்சம்.

1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இனுக்டிடூட் மொழியே முதன் முதலாக, வட-தென் அமெரிக்கக் கண்டங்கள் முழுவதிலுமே இந்தோ-ஐரொப்பிய மொழிக்குடும்பத்தச் சாராத ஒரு மொழி அரசாட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு ஆட்சி செய்துவரும் மொழியாகும்.

புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. சமீபத்தில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது.

இனுக்ரிருற் இதழ் இம்மொழியின் முக்கிய இதழ். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம், மற்றும் பிரேஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.

வெளி இணைப்புகள்


கனடா

Idioma inuktitut | Инуктитут | Inuktitut | Inuktitut | Inuktitut | Inuktitut | Inuita lingvo | Idioma inuktitut | Inuktituti keel | Inuktitutera | Inuktitut | Inuktitut | ᐃᓄᒃᑎᑐᑦ | イヌクティトゥット語 | 이누이트어 | Inuktitut | Inuktitut | Inuktitut | Língua inuktitut | Inuktitut | Inuktitut | 因纽特语

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "இனுக்ரிருற்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld