Gaim_chat_window.JPG இணைய உரையாடல்கள் அல்லது அரட்டை நிகழ்ச்சி நிரல்கள், இணைய இணைப்பின் மூலம் உடனுக்குடன் எழுத்து மூலமாகவோ பேச்சு மூலமாகவோ உரையாடிக் கொள்ள உதவுகின்றன. இவை மின்னஞ்சல் போன்று அல்லாமல் உடனடியாக மற்றவரின் மறுமொழியைப் பார்த்தே உரையாட ஏதுவாக இருப்பதால் அனைவராலும் மிகவும் விரும்பப் படுகின்றது. இவை பண்டைய அரசர்காலத்தில் இருந்த தூதுவர்கள் மூலமான உரையாடல்களை ஒத்திருப்பதால் இவ்வகையான உரையாடல் மென்பொருட்களை தூதுவர்கள் என்றும் அழைக்கின்றனர். ஆரம்பத்தில் ASCII முறையில் அமைந்திருந்த உரையாடல்கள், தற்பொழுது தமிழ் உட்பட உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை பயன்படுத்துகிறது. இன்று பெரும்பாலான் இம்மென்பொருட்கள் மூலம் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் தமக்கிடையில் முற்றிலும் இலவசமாக உரையாட முடிகின்றது.
தொலைபேசியைக் காட்டிலும் இவற்றில் சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக ஒரு தூதுவனில் இருந்து பிறிதோர் தூதூவனுக்கு செல்வது மிகவும் சிரமமான செயல். கூகிள் டாக் jabber தொழில் நுட்பத்தில் வேறு தூதுவர்களுடன் ஒத்தியங்கினாலும் யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் இதில் இன்னமும் இணையாமையால் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு வெற்றியை இன்னும் கணிக்க இயலவில்லை. இவற்றில் விண்டோஸ் தூதுவன் ஆனது விண்டோஸை நிறுவும் போது கிடைத்தாலும் MSN தூதுவனில் கூடுதல் வசதிகள் கிடைப்பதால் அதைப் பாவிப்பது சிறந்தது.
Xat | Chat | Chat | Chat | Online chat | Chatear | Babilejo | Txat | Chat (informatique) | Chat | 채팅 | צ'אט | Chatten (communicatie) | チャット | Chatting | Чат | Chat | Chat
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"இணைய உரையாடல்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world