article

Iso_logo.gif உலகின் பல நாடுகளின் தேசிய நியமங்கள் நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, நியமங்களை உருவாக்கும் உலக நிறுவனமே அனைத்துலக நியமப்படுத்தல் நிறுவனம் ஆகும். ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் நியமங்கள், நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது தேசிய நியமங்கள் மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு நியமங்கள் நிறுவனமும் இதன் நடவடிக்ககளில் பங்கு கொள்கிறார்கள்.

இது மின் உபகரணங்களுக்கான நியமங்களை உருவாக்கும் அனைத்துலக மின்தொழில்நுட்பக் கமிஷனுடன் (IEC) நெருக்கமாக இணந்து தொழிற்பட்டு வருகிறது.

பெயர்க் காரணம்


ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ)என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஓ நியமங்களில் மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பெருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.

வெளியிணைப்புகள்


நியமங்கள் உருவாக்கும் நிறுவனங்கள் | அரசசார்பற்ற நிறுவனங்கள்

إيزو | Международна организация по стандартизация | ISO | Organització Internacional per a l'Estandardització | Mezinárodní organizace pro normalizaci | International Organization for Standardization | International Organization for Standardization | International Organization for Standardization | Internacia Organizo por Normigado | Organización Internacional para la Estandarización | Rahvusvaheline Standardiorganisatsioon | ISO | Organisation internationale de normalisation | ארגון התקינה הבינלאומי | ISO | Alþjóðlega staðlastofnunin | Organizzazione Internazionale per le Standardizzazioni | 国際標準化機構 | 국제 표준화 기구 | International Organization for Standardization | International Organization for Standardization | ISO | ISO | International Organization for Standardization | International Organization for Standardization | Международная организация по стандартизации | Medzinárodná organizácia pre normalizáciu | Mednarodna organizacija za standardizacijo | ISO | ไอเอสโอ | ISO | Xalıqara Standartlaw Oyışması | Tổ chức tiêu chuẩn hoá quốc tế | 國際標準化組織 | ISO

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "அனைத்துலக நியமப்படுத்தல் நிறுவனம்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld